Section background image

பாரத் டெக்ஸ் 2025 – தமிழ்நாடு கண்காட்சி அரங்கம்

அரசு செயலாளர் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மற்றும் துணிநூல் இயக்குநர் அவர்களால் பிப்ரவரி 14 முதல் 17 வரை புதுதில்லியில் நடைபெற்ற பாரத் டெக்ஸ் 2025 நிகழ்வில் தமிழ்நாடு கண்காட்சி அரங்கத்தினை துவக்கி வைத்தனர். இந்நிகழ்வில் துறையின் சார்பில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 22 நிறுவனங்கள் அரங்குகளை அமைத்தனர்.

அரசு செயலாளர், கைத்தறி,கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை மற்றும் துணிநூல் இயக்குநர் அவர்கள் 14.02.2025 அன்று பாரத் டெக்ஸ் 2025 நிகழ்வின் ஒரு பகுதியாக பாரத மண்டபத்தில் தமிழகத்தில் ஜவுளி தொழில் என்ற கருப்பொருள் தொடர்பாக பேசினார்கள்.

துணிநூல் இயக்குநர் அவர்கள் கடந்த 15.02.2025 அன்று தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, 6 கூட்டுறவு நூற்பாலைகளின் மறுசீரமைப்பு போன்ற பொருள் தொடர்பாக Gherzi நிறுவனத்துடன் கலந்துரையாடினார்.

துணிநூல் இயக்குநர் அவர்கள் கடந்த 15.02.2025 அன்று தைவானைச் சார்ந்த Space fabric மற்றும் தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டு கழகம் (சிப்காட்) பிரதிநிதிகளுடன் இணைந்து கலந்துரையாடினார்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

-+=